தேசிய ரீதியில் நடைபெற்ற வூசோ குத்துச்சண்டை போட்டியில் கலந்துகொண்டு பதக்கங்களை வென்ற வவுனியா கோவில்குளம் இந்துக்கல்லூரி மாணவிகள் இரண்டு பேரை கௌரவிக்கும் நிகழ்வு கல்லூரியின் அதிபர் ரீ.பூலோகசிங்கம் தலைமையில் இன்று (05) கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
கொழும்பு மகறகம தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் (10-08-2018) தேசிய ரீதியில் நடைபெற்ற வூசோ குத்துச்சண்டை போட்டியில் வடமாகாணத்தை பிரதிபலித்து கலந்துகொண்டு கே.டிலக்சினி தங்கப்பதக்கத்தையும், என்.றோசிமன்யு வெள்ளிப்பதக்கத்தையும் சுவீகரித்து வடமாகாணத்திற்கு பெருமை சேர்த்திருந்தனர்.
அதனை கௌரவிக்கும் முகமாக வவுனியா இந்துக்கல்லூரியின் பாண்டு வாத்தியக்குழுவினரின் அணிவகுப்புடன் பதக்கங்களை வென்ற இரண்டு மாணவிகளும் அழைத்து வரப்பட்டு கல்லூரி அதிபரினால் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தனர்.
வடமாகாண ரீதியில் மாணவிகளை பயிற்றுவித்து கல்லூரிக்கும், மாகாணத்திற்கும் பெருமை சேர்த்த வடக்கு மாகாண வூசோ குத்துச்சண்டை பயிற்றுவிப்பாளர் எஸ். நந்தகுமாருக்கு கல்லூரி அதிபரினால் நினைவு பரிசில் ஒன்றும் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தார்.
இந்நிகழ்வில் பாடசாலையின் உடற்பயிற்சி ஆசிரியர் என்.பி.சுந்தராங்கன், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.