தாயின் கண்முன்னே மாடியிலிருந்து தவறி விழுந்த குழந்தை.. அடுத்து நடந்த அதிசயம்

சீனாவில் தாயில் கண்முன்னே மாடியிலிருந்து தவறி விழுந்த குழந்தையை பொலிஸார் லாவகமாக மீட்டு அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

Guangdong மாகாணத்தின் Fenggang பகுதியில் ஒரு வயதிற்குட்பட்ட சிறுவன், அந்தரத்தில் வயரில் மாட்டி தொங்குவதை அப்பகுதியில் சென்ற பாதசாரின் பெண் ஒருவர் பார்த்துள்ளார்.

உடனே பொலிஸாருக்கு தகவல் கொடுத்துவிட்டு அங்கிருந்த டெலிவரி செய்யும் இளைஞர் ஒருவரையும் உதவிக்கு அழைத்துள்ளார்.

சிறுவன் நிலை மிகவும் ஆபத்தில் இருப்பதை உணர்ந்த அந்த பெண் உடனடியாக தன்னுடைய வீட்டில் இருந்த ஒரு கம்பளத்தை பொலிசாரிடம் கொடுத்துள்ளார்.

சிறுவன் எப்போது வேண்டுமானாலும் விழ வாய்ப்பிருந்ததால், பொலிஸாரும், டெலிவரி செய்யும் இளைஞரும் கம்பளத்தை பிடித்தவாறே கீழே நின்றனர்.

இதனையடுத்து கீழே விழுந்த சிறுவனை பத்திரமாக கேட்ச் பிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தில் சிறுவனின் உதட்டில் லேசான காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post