நெருங்கி நெருங்கி முத்தம்.. கடுப்பான மனைவி.. கணவர் உதட்டை கடித்து துப்பினார்!


டெல்லி: கணவர் தனது உதட்டில் முத்தம் கொடுக்க முயன்றபோது சரியாக முத்தம் தராததால் ஏமாற்றமடைந்த மனைவி ஆத்திரத்தில் கணவரின் உதட்டைக் கடித்துத் துப்பி விட்டார்.

டெல்லியின் ரன்ஹோலா என்ற பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அப்பகுதியில் வசித்து வரும் இளம் தம்பதியினர் இவர்கள். இருவருக்கும் கடந்த 2016ம் ஆண்டு திருமணமானது. தற்போது மனைவி கர்ப்பமாக உள்ளார். 8 மாத கர்ப்பம். இருவருக்கும் 22 வயதாகிறது.

இருவருக்கும் திருமணமானது முதலே ஒத்துப் போகவில்லை. கணவர் அழகாக இல்லை என்பது பெண்ணின் குறையாக இருந்து வந்துள்ளது. இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை நடக்குமாம். இருப்பினும் அதையும் தாண்டி குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இந்த நிலையில்தான் அப்பெண் கர்ப்பமானார்.

அவ்வளவுதான் கடும் கோபமடைந்த மனைவி அப்படியே கணவரின் உதட்டைப் பிடித்து இழுத்து பலமாக கடித்து விட்டார். கோபாவேசத்தில் கடித்ததில் கிட்டத்தட்ட பாதி நாக்கு துண்டாகிப் போனது.

அலறித் துடித்த இளைஞரின் சத்தத்தைக் கேட்டு ஓடி வந்தார் அவரது தந்தை. உடனடியாக மருத்துவமனைக்கு மகனைக் கூட்டிச் சென்றார். பின்னர் போலீஸுக்கும் தகவல் கொடுத்தார்.

சப்தர்ஜங் மருத்துவமனையில் அந்த நபருக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவரால் மீண்டும் பேச முடியுமா என்பது குறித்து இப்போது கூற முடியாது என்று டாக்டர்கள் கூறி விட்டனர்.

போலீஸார் கர்ப்பிணி மனைவியை தற்போது கைது செய்துள்ளனர். ஆயுள் தண்டனை கிடைக்கக் கூடிய அளவிலான சட்டப் பிரிவுகளின் கீழ் அவரைப் போலீஸார் கைது செய்துள்ளனராம்.
Previous Post Next Post