இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்ட வெளிநாட்டு பெண்ணுக்கு நேர்ந்த துயரம்..!!

நுவரெலியா பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த வெளிநாட்டவர் ஒருவர் விடுதியின் மேல் மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.

நுவரெலியா மகஸ்தொட்ட பகுதியில் அமைந்துள்ள குறித்த விடுதியின் 3 வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த பெண் 34 வயதுடைய சீன பிரஜை என்றும் இலங்கைக்கு சுற்றுலா வந்திருந்த வேளையிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.Previous Post Next Post