கணவர் வெளிநாட்டில்! இலங்கையில் மனைவிக்கு ஏற்பட்ட பரிதாபம்

அம்பாறையில் பெண்களை கத்தி முனையில் மிரட்டி தங்க நகைகளை அபகரித்து சென்றுள்ளனர்.

வீட்டின் கூரையை கழற்றி வீட்டுக்குள் புகுந்த திருடர்கள் அங்கிருந்த பெண்களை மிரட்டி கொள்ளையடித்துள்ளனர்.மத்திய முகாம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 11ஆம் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக மத்திய முகாம் பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண்களினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கணவர் வெளிநாட்டில் தொழில் புரிந்து வருவதை கொள்ளையர்கள். சாதகமாக பயன்படுத்தி கொண்டுள்ளரன்.உறங்கிக் கொண்டிருந்த பெண்களிடம் கத்தியை காட்டி அச்சுறுத்தியுள்ளனர்.

பின்னர் அவர்களை தாக்கி அணிந்திருந்த ஏழு பவுண் நகையை மூன்று பேர் கொண்ட கும்பல் அபகரித்து சென்றுள்ளனர்.

இதேவேளை, கொள்ளையர்கள் முகமூடி அணிந்து வந்ததால் அடையாளம் காண முடியாமல் இருந்ததாக பாதிக்கப்பட்ட பெண்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், கொள்ளையர்களை கண்டுபிடிப்பதற்காக பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post