தெஹிவளையில் தீயில் சிக்கி பரிதாபமாக பலியான கர்ப்பிணிப் பெண்!

தெஹிவளையில் வீடொன்றில் பரவிய தீயில் சிக்கி பெண் வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.



உயிரிழந்த வைத்தியர் கர்ப்பிணிப் பெண் என களுபோவிலை வைத்தியசாலைப் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

சம்பவத்தில் காயமடைந்த உயிரிழந்த பெண்ணின் கணவரும் 5 வயதான பிள்ளையும் களுபோவிலை வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர தெஹிவளை தீயணைப்புப் பிரிவினரால் நான்கு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
Previous Post Next Post