தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் தனியார் நிதிநிறுவனம் ஒன்று பணத்தை ஏமாற்றியதால் வேதனையடைந்த மூன்று சகோதரிகள் தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த தற்கொலை முயற்சியில் சகோதரிகளில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சேலத்தை சேர்ந்த மூன்று சகோதரிகள் அங்குள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் பணம் முதலீடு செய்திருந்தனர்.
இந்நிலையில் அந்த தனியார் நிதி நிறுவனம் பணத்தை தராமல் ஏமாற்றி வந்ததாக தெரிகிறது.
சகோதரிகள் மூவரும் திருமணத்திற்காக பணத்தை சேமித்த வைத்திருந்த நிலையில் நிதி நிறுவனம் ஏமாற்றியதால் பணம் கிடைக்காது என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த சகோதரிகள் மூன்று பேரும் விஷம் குடித்து தற்கொலை முயன்றனர். இதையடுத்து மூன்று பேரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில் மேனகா என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஆபத்தான நிலையில் உள்ள ரேவதி மற்றும் கலை ஆகிய 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.