
சிறைக்குள் வைத்தே தன்னை கொல்ல வாய்ப்பு உள்ளதாக பேராசிரியை நிர்மலா தேவி நீதிபதியிடம் புகார் மனு அளித்துள்ளார்.
கல்லூரி மாணவிகளை மேலதிகாரிகளுக்கு நெருக்கம் காட்ட சொல்லி தவறான பாதையில் வழி நடத்த முற்பட்ட வழக்கில் அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவி கைதாகி சிறையில் உள்ள நிலையில் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது, சிறையில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக நிர்மலா தேவி நீதிபதியிடம் தெரிவித்தார்.
இதை மனுவாக கொடுக்கும்படி நீதிபதி உத்தரவிட்டதையடுத்து மனுவாக நீதிபதியிடம் நிர்மலா தேவி சமர்ப்பித்தார். அந்த மனுவில், வெளியில் இருப்பவர்களின் தூண்டுதலால் உயிருக்கு ஆபத்து உள்ளது.
சிறை கைதிகள், சிறை காவலர்கள் மூலமாக உயிருக்கு ஆபத்து உள்ளது. எனவே எனக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
மனுவை பெற்றுக்கொண்ட நீதிபதி இதுதொடர்பாக எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை.
நிர்மலா தேவி விவகாரத்தில் பல முக்கிய புள்ளிகள் சிக்கியுள்ளதாக கூறப்படும் நிலையில் அவரின் இந்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.