கிளிநொச்சி பாடசாலை ஒன்றில் திடீரென மயங்கி வீழ்ந்த மாணவிகள்

கிளிநொச்சி கந்தபுரம் இல.2 பாடசாலையில் கல்வி கற்கும் மாணவிகள் மூவர் பிஸ்கட் உண்ட பின்னர் மயங்கி விழுந்த நிலையில் அவசர நோயாளர் காவுவண்டி மூலம் உடனடியாக அக்கராயன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

வழமை போல் பாடசாலைக்கு சமூகமளித்த தரம் ஏழுலில் கல்வி பயிலும் மாணவி ஒருவரும், தரம் மூன்றில் கல்வி பயிலும் மாணவிகள் இருவரும் பாடசாலைக்கு வரும் போது வழியில் உள்ள கடையொன்றில் ஆளுக்கொரு பிஸ்கட் பைக்கற்றுகளை வாங்கிவந்துள்ளனர்.


அதனை முற்பகல் பத்து 45 மணியளவில் உண்ட பின்னர் சில விநாடிகளில் மயங்கி விழ்ந்துள்ளனர்.

அவசரமாக செயற்பட்ட ஆசிரியர்கள் நோயாளர் காவு வண்டிக்கு அழைப்பினை மேற்கொண்டு வரவழைத்து மாணவிகள் மூவரையும் அக்காராயன் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது குறித்த மூன்று மாணவிகளும் சிகிசைப்பெற்று வருகின்றனர்.
Previous Post Next Post