இந்தியாவின் குஜராத்தில் மனைவிக்கு வேறு நபருடன் கள்ளத்தொடர்பு இருந்ததால் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மன்ஹர் பர்மர் என்ற நபர் சில தினங்களுக்கு முன்னர் வீட்டில் இருந்த கழிவறையை சுத்தம் செய்யும் பினாயிலை குடித்த நிலையில் மயங்கியுள்ளார்.
அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் சிகிச்சை பலனின்றி பர்மர் உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்திய நிலையில் பர்மர் எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றினார்கள்.
அதில், என் மனைவியின் கள்ளக்காதலன் முஸ்தாக் என்னை துன்புறுத்தி வந்தார்.
மனைவிக்கு முஸ்தக்குடன் ஏற்பட்ட தொடர்பு குறித்து அறிந்தவுடன் நான் அதுகுறித்து அவரிடம் கேட்டதால் எனக்கும், அவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டது.
அவளின் தொடர்பு என் வாழ்க்கையை நாசமாக்கிவிட்டது என எழுதியுள்ளார்.
இதையடுத்து பர்மரின் மனைவி மற்றும் காதலன் முஸ்தாக் மீது வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார் அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.