யாழில் திருமண வீட்டில் பாரிய கைகலப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதன் போது கத்திக்குத்துக்கு இலக்காகிய இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம், வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.

இதில், அதே பகுதியை சேர்ந்த தந்தை, மகன் இருவரும் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளனர்.
திருமண நிகழ்வின் போது மாலை வேளை மதுபோதையில் இருவர் முரண்பட்டு கைக்கலப்பில் ஈடுபட்டனர்.
இதன் போது ஒருவர் மற்றொருவரை கடுமையாக தாக்கியுள்ளார்.
தாக்குதலுக்கு இலக்கான நபர் இரவு நேரத்தில் தன்னை தாக்கியவரின் வீட்டுக்குள் புகுந்து தன் மீது தாக்குதல் நடத்தியவருக்கும், அவருடைய மகனையும் கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
கத்திக்குத்துக்கு இலக்கான இருவரும் சிகிச்சைக்காக மந்திகை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.