திடீரென வாகனங்களை மறித்து யாழில் புகைப் பரிசோதனை!!

யாழ்ப்பாணத்தில் இன்று மோட்டார் போக்குவரத்துத் திணைக்களமும், பொலிஸாரும் இணைந்து வாகனங்களுக்குப் புகைப் பரிசோதனையும், தரப் பரிசோதனையும் மேற்கொண்டனர்.

யாழ்ப்பாணம் நாச்சிமார் கோயில் முன்பாக வீதிகளில் பயணித்த வாகனங்கள் மறிக்கப்பட்டுச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

புகைப் பரிசோதனையில் தோல்வியடைந்த வாகனங்களும், தரம் குறைந்த வாகனங்களும் அவற்றைச் சீர் செய்யக் கால அவகாசம் வழங்கப்பட்டது. சாரதிகளின் சாரதி அனுமதிப் பத்திரம் பொலிஸாரால் பெறப்பட்டு அவர்களுக்கு தண்டப் பத்திரம் வழங்கப்பட்டது.

முச்சக்கர வண்டிகளும் தரச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அவற்றில் பொருத்தப்பட்டிருந்ந அலங்காரப் பொருள்கள், மேலதிக உபகரணங்கள் அனைத்தையும் அகற்றுவதற்கும் உத்தரவிடப்பட்டது.

இரு மணித்தியாலங்களுக்கு மேலாக நடைபெற்ற சோதனையில் சுமார் 50க்கும் அதிக வாகனங்கள் சோதனையிடப்பட்டன. இ.போ.ச. பேருந்து ஒன்று மட்டும் சோதனையிடப்பட்டது.Previous Post Next Post