சடலமாக மீட்கப்பட்ட பெண் விரிவுரையாளர் தொடர்பில் வெளியாகிய தகவல்..!!


காணாமல்போயிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண் விரிவுரையாளரின் உடல் யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திருகோணமலை பொது வைத்தியசாலை சட்ட வைத்திய நிபுணர் விடுமுறையில் சென்றுள்ளதால் பிரேத பரிசோதனையை யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.

 திருகோணமலை மேலதிக நீதவான் சமிலா குமாரி ரத்நாயக்க இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இதற்கு அமையவே நடராசா போதநாயகியின் சடலம் இன்று காலை 10 மணியளவில் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மீட்கப்பட்ட சடலத்தில் சந்தேகம் நிலவுவதாக உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள், பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளதாக தெரியவருகிறது.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக பெண் விரிவுரையாளர் காணாமல்போயிருந்த நிலையில் நேற்றைய தினம் சங்கமித்த கடற்கரையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

இதேவேளை அந்த பெண் மூன்று மாத கர்ப்பிணி என பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
Previous Post Next Post