
பாலியல் குற்றத்தில் சிக்கிய சாமியார் நித்யானந்தா மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
நித்தியின் வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
இன்னும் கொஞ்ச நாளில் மாடுகளும் எருதுகளும் உங்களிடம் மிக அழகான தமிழிலும் சமஸ்கிருதத்திலும் பேசும் என சாமியார் நித்யானந்தா பேசியிருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
நமக்கு இருக்கும் உள் உறுப்புகள் இல்லாத குரங்குகளையும் இன்னும் பிற விலங்குகளையும் தூண்டிவிட்டு அந்த விலங்குகள் தாமாகவே உள் உறுப்புகளை உருவாக்கும் படி செய்ய விருக்கிறேன். இதை நான் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கவும் உள்ளேன்.
இதற்கான மென்பொருளை சோதனை செய்துவிட்டுதான் இன்று உங்களிடம் நான் இதை பேசுகிறேன். இன்னும் ஒரே ஆண்டில் இதை செயல்படுத்தி நிரூபிப்பேன். என்னால் குரங்களுக்கும், மாடுகள், எருதுகள், புலி, சிங்கங்களுக்கும் குரல் நாணை உருவாக்கப்போகிறேன்.
அது மொழியை பேசக்கூடியதாக இருக்கும். வெகு விரைவில் மாடுகளும் எருதுகளும் உங்களிடம் மிக அழகான பிழையில்லாத தமிழிலும் சமஸ்கிருதத்திலும் பேசும் இவ்வாறு கூறியுள்ளார் நித்யானந்தா.
அவர் ஒவ்வொரு முறை இப்படி பிதற்றும்போதும் வீடியோவுக்கு பின்னணியாக இசை சேர்க்கப்பட்டுள்ளது. எதிரே குட்டி சீடர்களும் அமர்ந்துள்ளனர்.இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. ஆனால், இப்போது திடீரென வைரலாகிக் கொண்டிருக்கிறது.