
ஒரு வீடு பதினாறு போட்டியாளர்கள், நல்லவர் யார், கெட்டவர் யார்? என்று வெளியான புரொமோவைத் தொடர்ந்து கடந்த ஜூன் 17-ம் தேதி ஒளிபரப்பாகத் தொடங்கியது பிக் பாஸ் 2.
கமல்ஹாசன் தொகுத்து வழங்க ஐஸ்வர்யா, ரித்விகா, ஜனனி, மும்தாஜ், சென்றாயன், பாலாஜி, நித்யா, பொன்னம்பலம், ஷாரிக், மகத், மமதி சாரி, வைஷ்ணவி, டேனி, ரம்யா என்.எஸ்.கே, அனந்த் வைத்தியநாதன்,
யாஷிகா ஆனந்த் ஆகிய 16 பேர் உள்ளே சென்றார்கள். பல்வேறு டாஸ்குகள் வழங்கப்பட்டு எவிக்ஷன் புராசஸ் தொடங்கி ஒவ்வொருவராக வெளியேறி, ரித்விகா, ஐஸ்வர்யா, ஜனனி, வைல்டு கார்டு என்ட்ரி மூலம் பின்னர் வந்த விஜயலட்சுமி ஆகிய நான்கு பேரும் இறுதிச் சுற்றுக்கு வந்த நிலையில், தற்போது இவர்களுக்குக் கிடைத்த ஓட்டுக்களின் அடிப்படையில் குறைவாக ஓட்டுக்கள் வாங்கிய ஜனனி வெளியேறியுள்ளார்.
இன்னும் சற்று நேரத்தில் ஒளிபரப்பாக இருக்கிற எபிசோடில் ஜனனி எவிக்ஷனைக் காணலாம். முன்னதாக ரூ.10 லட்சம் பணத்தை உள்ளே அனுப்பி `இதை எடுத்துக்கொண்டு யாரேனும் வெளியேறுகிறீர்களா?’ எனக் கமல் கேட்க, நாங்கள் பணத்துக்காக மட்டுமே ஷோவுக்குள் வரவில்லை என்றார்களாம் நால்வரும்.
தொடர்ந்து இன்று இரவு கடைசி எவிக்ஷனாக விஜயலட்சுமி வெளியேறலாம் எனவும் தெரிகிறது. ஆக, நாளை ரித்விகா, ஐஸ்வர்யா இருவரும் ஃபைனலில் மோதுகிறார்கள்.