இலங்கையில் வெவ்வேறு துப்பாக்கி சூட்டில் இருவர் பலி- cctv காணொளி இணைப்பு


ஹிக்கடுவை அஞ்சல் நிலையத்திற்கு அருகில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியானார்.

துப்பாக்கி பிரயோகத்திற்கு உள்ளான குறித்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் 37 வயதுடைய, தெல்வத்தை பிரதேசத்தை சேர்ந்தவர் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வீதியில் பயணித்த குறித்த நபரை உந்துருளியில் வந்த இனந்தெரியாத இருவர் இவ்வாறு சுட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

எவ்வாறாயினும் , இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தனிப்பட்ட தகராறு காரணமாக இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படாத நிலையில் காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.



இதேவேளை, தங்காலை – ரன்ன – வாடிகலை பிரதேசத்தில் உந்துருளியில் வந்த இருவர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியானார்.நேற்று முற்பகல் முகத்தை முழுமையாக மறைக்கும் தலைகவசத்தை அணித்து பிரவேசித்த இருவரே இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் 42 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.வெலிஹார பிரதேசத்தில அமைந்துள்ள வாகன சேவை மையத்தின் உரிமையாளர் ஒருரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காணொளியில் பதிவாகியுள்ளது
Previous Post Next Post