14 வயது சிறுமியுடன் சென்ற கணவர்: கதறிய மனைவி...வெளியான பின்னணி

தமிழகத்தின் சேலத்தில் தனது கணவர் 14 வயது சிறுமியோடு ஓடிபோய்விட்டதாக பெண் ஒருவர் ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணான துர்கா (25) கூறுகையில், எனக்கு வெற்றி (27) என்பவருடன் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது.

எங்களுக்கு சதா (8) மற்றும் சனா (7) என இரண்டு குழந்தைகள் உள்ளார்கள்.

என் கணவர் புதுக்கோட்டையில் எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த வடிவேல், பரிமளா தம்பதியின் மகள் பாண்டியம்மாளை கூட்டிட்டு ஓடிட்டார்.

அந்த பொண்ணுக்கு 14 வயது தான் ஆகிறது, எட்டாம் வகுப்பு படிக்கிறார்.

அவர் அப்பா, அம்மாவிடம் ஒன்றரை லட்சம் பணம் கொடுத்துவிட்டு அந்தப் பொண்ணைக் கூட்டிட்டு ஓடிட்டார்.

அவர்கள் பொலிசில் புகார் கொடுக்கவில்லை

என் கணவரை மீட்டு கொடுக்க வேண்டும் என ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளேன் என கூறியுள்ளார்.

இதனிடயில் சிறுமி பாண்டியம்மாளின் தந்த வடிவேல் கூறுகையில், என் பொண்ணு ஓடிப்போன மானம் தாங்காமல் என் மனைவி ஊரான ராஜபாளையத்துக்கு வந்துட்டோம் பொலிஸ் புகார் கொடுத்தால் எங்க இனத்தின் பெயர் கெட்டுப் போயிடும்.

வெற்றியை பிடித்துக் கொல்லாமல் விடமாட்டேன் என கூறியுள்ளார்.

Previous Post Next Post