ரெமோ 2-ஆம் கொண்டாட்டம்; வைரலாகும் புகைப்படம்!

 ரெமோ திரைப்படத்தின் 2 ஆண்டை கொண்டாடும் வகையில் சிவகார்த்திகேயன் மற்றும் அவரது மகள் ஆராதனா ரெமோ-நர்ஸ் கெட்அப்பில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது!

ரெமோ திரைப்படத்தின் 2 ஆண்டை கொண்டாடும் வகையில் சிவகார்த்திகேயன் மற்றும் அவரது மகள் ஆராதனா ரெமோ-நர்ஸ் கெட்அப்பில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது!

பக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் 2016-ஆம் ஆண்டு நடிகர் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வெளிவந்த திரைப்படம் ரெமோ. இப்படத்திற்கு பி.சி.ஶ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருந்தார். மேலும் அனிருத் இசையமைத்திருந்தார். இந்த படம் வெளியாகி நேற்றோடு இரண்டு வருடங்கள் முடிவடைகிறது.

இந்நிலையில் இதனை கொண்டாடும் வகையில் சிவகார்த்திகேயன் தனது மகள் ஆராதனாவுடன் ரெமோ-நர்ஸ் கெட்அப்பில் இருக்கும் புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. முன்னதாக கனா படத்திற்காக சிவகார்த்திகேயன் தனது மகள் ஆராதனா-வுடன் பாடிய வாயாடி பெத்த புள்ள பாடல் இன்னும் யூடியூப்பில் ட்ரண்டில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post