3 குழந்தைகளை ஆற்றில் எறிந்துவிட்டு தாய் எடுத்த விபரீத முடிவு: அதிர்ச்சி சம்பவம்ஹைதராபாத்தில் 3 குழந்தைகளையும் ஆற்றில் வீசி கொலை செய்துவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற தாய் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஹைதராபாத் மாநிலத்தை சேர்ந்த Cheruku Muthyalu என்ற நபர், நேற்று பெண் ஒருவர் தன்னுடைய 3 குழந்தைகளை ஆற்றில் தூக்கி வீசிவிட்டு, அவரும் குதித்து தற்கொலைக்கு முயல்வதை பார்த்துள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்ததோடு, மீட்பு பணியில் ஈடபட ஆரம்பித்தார்.


இந்த சம்பவம் குறித்து பொலிஸார் கூறுகையில், ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற Angothu Swathi-ன் கணவர் மோகன் உள்ளுர் காவல்நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இதில் ஆற்றில் தூக்கி எறியப்பட்ட அவர்களுடைய மகள்கள் Sathvika (6), Mithuna (4)-ன் உடல்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுன.

அவருடைய மகன் Mamanth Kumar (3) உடலை மீட்பு படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். உயிருடன் மீட்கப்பட்ட Swathi, கவலைக்கிடமான நிலையில் யசோதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சம்பவம் நடப்பதற்கு முன்பு மோகனுக்கு அவருடைய மனைவிக்கு சண்டை ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து தற்போது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என கூறியுள்ளனர்.

Previous Post Next Post