5 வருட காதல்! கருக்கலைப்பு மாத்திரையுடன் வந்த இளம்பெண்... திடுக்கிடும் பின்னணி

தமிழகத்தில் பெண்னை ஏமாற்றி கர்ப்பமாக்கி திருமணம் செய்ய மறுத்த காதலன் ரூ.1.10 லட்சம் பணம் தருவதாகவும், கருவை கலைக்க கருகலைப்பு மாத்திரைகள் வழங்கியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டத்தை சோ்ந்தவர் கார்த்திகா (21). இவர் ஆட்டோ ஓட்டுநர் கோகுலை (25) கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்திருக்கிறார்.

இருவரும் எல்லை மீறி பழகியதால் கார்த்திகா கர்ப்பமானார்.

இதையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ள கோகுலை, கார்த்திகா வற்புறுத்திய நிலையில் அவர் மறுத்துள்ளார்.

பின்னர், கோகுலுக்கு ஆதரவாக திருவாரூர் அதிமுக ஒன்றிய செயலாளர் மணிகண்டன் கார்த்திகாவையும் அவரது குடும்பத்தினரையும் அழைத்து கட்டபஞ்சாயத்து பேசி ரூ1.10 லட்சம் பெற்று தருவதாகவும் கோகுலை விட்டு விட வேண்டும் என்றும் கருவை கலைத்துவிடவேண்டும் என்று மிரட்டலாக கூறி முன்பணமாக ரூ.10 ஆயிரம் மற்றும் கருகலைப்பு மாத்திரைகளையும் வழங்கி மிரட்டியதாக பாதிக்கப்பட்ட கார்த்திகா மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

கருகலைப்பு மாத்திரையுடன் காவல் நிலைய வாசலில் பேசிய கார்த்திகா, என்னை ஏமாற்றிய காதலுடன் திருமணம் செய்துவைக்க வேண்டும்.

மேலும், அதிமுக ஒன்றிய செயலாளர் மீது உரியநடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
Previous Post Next Post