யாழில் உயிரை காக்க கிணற்றுக்குள் குதித்த இளைஞன் மீது கல்வீச்சு..!!

திருநெல்வேலி ஆடியபாதம் வீதியில் அமைந்துள்ள மரக்காலை ஒன்றில் நின்றிருந்த இளைஞரை  4 மோட்டார் சைக்கிளில் வந்த 10 பேர், வாளால் வெட்ட துரத்தி சென்றுள்ளார்கள்.

நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இளைஞர் உயிரை காப்பற்றுவதற்காக தப்பி ஓடிச்சென்று அருகே உள்ள கிணற்றினுள் குதித்துள்ளார்.

அப்போது அவரை துரத்திச்சென்ற வாள்வெட்டு குழுவினர் கற்களை கிணற்றினுள் வீசி அவர்மேல் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

அந்த நேரம் அப்பகுதியால் சென்ற பொலிஸார் சம்பவ இடத்துக்கு வந்த போது வாள்வெட்டுக்குழுவினர் தப்பிச்சென்றுள்ளனர்.

இருப்பினும் சம்பவத்துடன் தொடர்புடைய  மூன்று நபர்களை பொலிஸார் துரத்தி சென்று கைது செய்துள்ளார்கள்.

இதில் கைதடிப்பகுதியை சேர்ந்த 2 பேரும் கொக்குவிலை சேர்ந்த ஒருவரும் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்களிடம் இருந்து இரு வாள் களையும் பொலிஸார் மீட்டனர்.
Previous Post Next Post