ஒரு மாதத்தில் கணவனை கொல்ல முயன்ற புதுமணப்பெண்: வெளியான அதிர்ச்சி தகவல்


சென்னை கடற்கரையில் கணவனின் கண்ணை கட்டி காதலன் உதவியுடன் கொலை செய்ய முயற்சித்த மனைவியின் வழக்கில் அதிரடி திருப்பமாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

தூத்துக்குடியை சேர்ந்த கதிரவன் (வயது 30) சென்னையில் தங்கி சோழிங்கநல்லூரில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்துவருகிறார்.

இவர் கடந்த 30 நாட்களுக்கு முன்னதாக தூத்துக்குடியை சேர்ந்த அனிதா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் நேற்று மாலை கடற்கரைக்கு சென்று கண்ணை கட்டி விளையாடியுள்ளனர்.

அப்போது திடீரென அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் கதிரவனை கொடூரமாக தாக்கி, அனிதாவின் கழுத்தில் இருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக கதிரவனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து பொலிஸாரிடத்திலும் தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை பொலிஸார் ஆய்வு செய்தபோது, மர்ம நபர்கள் கதிரவனை தாக்கும்போது எந்தவித உண்ர்ச்சியுமின்றி சாதாரமான ஒரு பெண்ணை போல அனிதா நின்றுகொண்டிருந்ததால் பொலிஸாருக்கு சந்தேகம் வலுத்தது.

பின்னர் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், கல்லூரி படிக்கும்போது ஜெகன் என்கிற ஆண்டனியை (25) காதலித்ததாகவும், அதற்கு மறுப்பு தெரிவித்து வீட்டார் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்ததாகவும் தெரிவித்தார். இதன் காரணமாக என்னுடைய கணவரை கொலை செய்ய முயற்சித்தோம் என வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இதற்கிடையில் மதுரைக்கு விரைந்த தனி காவல்படையினர் ஜெகனை கைது செய்து அவனிடமும் விசாரணை நடத்தினர். அதில் திடுக்கிடும் தகவலாக ஏற்கனவே ஒரு முறை கதிரவனை கொலை செய்ய முயற்சித்த சம்பவம் அரங்கேறியிருப்பது தெரியவந்தது. தேனிலவு சென்ற போது மலையில் இருந்து தள்ளிவிட முயன்றதாகவும், ஆனால் அந்த முயற்சி தோல்வியடைந்ததாலே மீண்டும் முயற்சி செய்ததாகவும் தெரியவந்துள்ளது.
Previous Post Next Post