பூட்டிய வீட்டினுள் ரத்த வெள்ளத்தில் கிடந்த குழந்தை: தூக்கில் தொங்கிய பெற்றோர்.. அதிர்ச்சி சம்பவம்

கடலூர் மாவட்டத்தில் பூட்டிய வீட்டினுள் ரத்த வெள்ளத்தில் குழந்தை ஒரு புறம் இறந்து கிடக்க, மறுபுறம் பெற்றோர்கள் தூக்கில் தொங்கியபடி தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ள சோக சம்பவம் நடந்துள்ளது.

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அடுத்த இடைச்செருவாய் காலனியை சேர்ந்தவர் பிரகாஷ் (25). இவருடைய மனைவி உஷா (20). இந்த தம்பதியினருக்கு 2 வயதில் பிரதியுஷா என்ற குழந்தை உள்ளது.

பிரகாஷ் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் வேலை பார்த்து வந்ததால் குடும்பத்துடன் அனைவரும் அங்கு தங்கியிருந்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மூவரும் தங்களுடைய சொந்த ஊருக்கு வந்திருந்துள்ளனர்.

இந்த நிலையில் நீண்ட நேரமாக வீடு பூட்டியிருப்பதை பார்த்த, பிரகாஷின் தாய் இன்று அதிகாலை வீட்டை திறந்து பார்த்துள்ளார்.

அப்போது கழுத்தில் பிளேடால் அறுக்கப்பட்ட நிலையில் 2 வயது குழந்தையும், தூக்கில் தொங்கிய நிலையில் கணவன், மனைவி இருவரும் சடலமாக கிடந்துள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்தார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் மூவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post