நிச்சயம் முடிந்த மணப்பெண்ணுக்கு சரமாரி கத்திக்குத்து: இளைஞர் வெறிச்செயல்

திருத்துறைப்பூண்டியில் நிச்சயதார்த்தம் முடிந்த பெண்ணை முன்னாள் காதலன் திடீரென வீடு புகுந்து சரமாரியாக கத்தியால் குத்தியுள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

திருவாரூர் மாவட்டம் நெடுபலம் பகுதியில் வசித்து வருபவர் ரவிச்சந்திரன். இவருடைய மகள் அரவிந்தியா பட்டபடிப்பினை முடித்துவிட்டு அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

கடந்த 15 நாட்களுக்கு முன்பு இவருக்கு நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், சிங்காளந்தி பகுதியைச் சேர்ந்த முத்தரசன் என்பவர் திடீரென வீடு புகுந்து அரவிந்தியாவை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார்.

இதனை தடுக்க முயன்ற அரவிந்தியாவின் அம்மாவையும் கத்தியால் குத்திவிட்டு முத்தரசன் தப்பி ஓடியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த அரவிந்தியா தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலிஸார் குற்றவாளி முத்தரசனை தேடி வருகின்றனர். இதுசம்மந்தமாக நடத்தப்பட்ட விசாரணையில், முத்தரசனும், அரவிந்தியாவும் முன்னாள் காதலர்கள் எனவும், அரவிந்தியா திருமணத்திற்கு மறுத்ததும் தெரியவந்துள்ளது.
Previous Post Next Post