கணவரை தவிக்கவிட்டு வெளிநாட்டுக்கு ஓட்டம் பிடித்த மனைவி: அதிர்ச்சி பின்னணி

இந்தியாவின் பஞ்சாப்பை சேர்ந்த நபர், தன்னை ஏமாற்றிவிட்டு பணம் மற்றும் நகைகளுடன் மனைவி கனடாவுக்கு ஒடிபோய்விட்டதாக கூறியுள்ளார்.

குர்பிரீத் சிங் என்பவர் தான் தனது மனைவி மற்றும் அவர் குடும்பத்தினர் செயலால் பாதிக்கப்பட்டுள்ளார்.

அவர் கூறுகையில், எனக்கும் கவுர் என்ற பெண்ணுக்கும் கடந்த 2006-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் நடைபெற்றது.

பின்னர் பெண் குழந்தை எங்களுக்கு பிறந்த நிலையில் படேல் என பெயர் வைத்தோம்.

கடந்த 2009 டிசம்பர் 4-ஆம் திகதி குழந்தை பராமரிப்பு தொடர்பான படிப்பினை படிக்க செல்வதாக கூறி கவுர் கனடாவுக்கு தனது பெற்றோருடன் சென்றார்.

இதற்காக என்னிடம் ரூ.14 லட்சம் வாங்கினார். பின்னர் நானும் கனடா செல்ல விரும்பி எனக்கு ஸ்பான்சர்ஷிப் தயார் செய்யும்படி கவுரியிடம் கூறினேன்.

அதிலிருந்து அவர் என்னிடம் பேசுதை நிறுத்திவிட்டார்.

மீண்டும் கடந்த 2016-ஆம் ஆண்டு ஏப்ரல் 29-ஆம் திகதி கனடாவிலிருந்து இந்தியா வந்த கவுர் என்னுடன் சில நாட்கள் தங்கிவிட்டு மீண்டும் கனடா சென்றார்.

போகும்போது தங்க நகைகளை எடுத்து சென்றார், அதன்பின்னர் அவரை தொடர்பு கொள்ளவே முடியவில்லை.
இது குறித்து பொலிசில் புகார் அளித்துள்ளேன் என கூறியுள்ளார். சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Previous Post Next Post