குடிபோதையில் இளைஞரை கிணற்றில் தள்ளி கொன்ற நண்பர்கள்: வீடியோ காட்சிகள் வெளியானதால் அதிர்ச்சி

தமிழகத்தின் வேலூரில் குடிபோதையில் இருந்த இளைஞர்கள், ஒருவரை கிணற்றில் தள்ளி விட்டதில் அவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்மந்திகுப்பத்தைச் சேர்ந்த இளைஞர் மவீன் பெங்களூரில் தொழில் செய்து வந்த நிலையில் ஞாயிறு விடுமுறையை ஒட்டி ஊருக்கு வந்துள்ளார்.

நேற்று மாலை அவரது நண்பர்கள், சுதர்சன், பவீத், ராகுல், கல்யாண குமார், அருண் குமார், அஜித் குமார் ஆகியோருடன் சேர்ந்து மவீன் தோப்பில் மது அருந்தியுள்ளார்.

இதில் அனைவருக்கும் போதை தலைக்கேறிய நிலையில் எல்லோரும் வீடு திரும்ப, மவீன் மட்டும் வீடு திரும்பவில்லை.

இந்நிலையில் இன்று காலை அவர்கள் மது அருந்திய தோப்பில் உள்ள கிணற்றில் மவீனின் சடலம் மிதந்துள்ளது.

மவீனின் உறவினர்கள் அங்கு வந்து பார்க்கையில், மவீனின் செல்போன் கண்டுபிடிக்கப்பட்டது. அவரது செல்போனை ஆராய்கையில், மவீன் எவ்வாறு இறந்தார் என்ற நேரடிக் காட்சிகள் பதிவாகியிருந்தன.

போதை தலைக்கேறிய நிலையில் நண்பர்களுடன் மவீன் வாக்குவாதம் செய்யும் காட்சிகள் வீடியோவில் இருந்தது.

மேலும் மவீனைப் பிடித்து ஒருவர் தள்ளி விடுவதும், பின்னர் அனைவரும் கிணற்றில் குதித்து குளிக்கும் காட்சிகளும் பதிவாகியுள்ளன.




குளித்து முடித்துவீட்டு ஓரளவு போதையில் இருந்த நண்பர்கள் வீடு திரும்பிய நிலையில், முழு போதையில் இருந்த மவீன் மட்டும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததை அடுத்து 5 பேர் தலைமறைவாகியுள்ளனர். அருண்குமார் மட்டும் பொலிசில் சிக்கியுள்ளார்.

விளையாட்டாக செய்தது வினையாகிட்டது என அவர் பொலிசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
Previous Post Next Post