
தமிழ்நாட்டில் பெண்ணொருவருக்கு வேறு நபருடன் தொடர்பு இருப்பதை அறிந்த கணவர் அவரை வெட்டி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் சேதுநாராயணபுரம் இரவக்காடு பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா.
இவர் கவுசல்யா என்ற பெண்ணை திருமணம் செய்த நிலையில் தம்பதிக்கு கவனேஷ் என்ற குழந்தை உள்ளது.
இந்நிலையில் நபர் ஒருவருடன் கவுசல்யாவுக்கு தொடர்பு இருப்பதை அறிந்த கருப்பையை மனைவியை கண்டித்துள்ளார்.

இதையடுத்து கோபித்து கொண்டு தனது உறவினர் வீட்டுக்கு சென்றார் கவுசல்யா.
நேற்றிரவு மது அருந்திய கருப்பையா, தனக்குத் துரோகம் செய்த மனைவியை கொல்ல முடிவெடுத்து அங்கு சென்றார்.
பின்னர் அரிவாளால் வெட்டி கவுசல்யாவை கொன்றதோடு தடுக்க முயன்ற உறவினர் தங்கமுடியின் கையிலும் வெட்டினார்.
இதையடுத்து தங்கமுடி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். கருப்பையாவைக் கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்துகின்றனர்.
