வவுனியாவில் இன்று காலை குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!


வீட்டிற்கு வெளியே சென்ற  குடும்ப பெண்ணுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி. வவுனியாவில் சம்பவம்.

வவுனியாவில் இன்று (06.10) காலை 5.30 தூக்கில் தொங்கிய நிலையில் வீட்டிற்கு முன்னால் சடலம் ஒன்று இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற  பொலிசார்  சடலத்தினை  மீட்டெடுத்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
வவுனியா ஈச்சங்குளம் பகுதியில் வசித்த வந்த விவசாயியான கனகசிங்கம் கதிர்காமநாதன் 46வயதுடைய  குடும்பஸ்தர் இன்று காலை 5.30 மணியளவில் வீட்டிற்கு முன்னாலுள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.

நேற்று இரவு 10 மணியளவில் நித்திரைக்கு  சென்றதாகவும்  இன்று காலை 5.30 மணியளவில் வீட்டிற்கு வெளியே சென்ற  போது கணவன் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக மனைவி தெரிவித்துள்ளார். இதையடுத்து பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

சம்பவ இடத்திற்குச் சென்ற ஈச்சங்குளம் பொலிசார்  சடலத்தினை பார்வையிட்டுள்ளதுடன் விசாரணைகளின் பின்னர் வைத்தியசாலைக்கு சடலம் எடுத்து செல்லப்படவிருப்பதாகவும்  குடும்ப பிரச்சினை காரணமாகவே தற்கொலை செய்திருக்கலாம் எனவும் ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரிய வருவதாகவும்  பொலிஸார்  மேலும்  தெரிவித்தனர். 
Previous Post Next Post