கண், காது, மூக்கில் வழியும் ரத்தம்... சாப்பிடக்கூட முடியவில்லை! தவிக்கும் தமிழக சிறுவன்


தமிழ்நாட்டை சேர்ந்த 12 வயது சிறுவனுக்கு வினோத நோய் ஏற்பட்டுள்ளதால் அவன் கண், மூக்கு, காதுகளில் ரத்தமாக வழிந்து கொண்டிருக்கிறது.

ராஜபாளையம் அருகே சட்டிகிணறு என்ற கிராமத்தை சேர்ந்த மகாலட்சுமி - ராஜேந்திரன் தம்பதியின் மகன் அபிஷேக் (12).

அபிஷேக்கிற்கு Aplastic Anemia என்ற வினோத நோய் உள்ளதால் அவன், மூக்கு, காதுகளில் ரத்தம் வழிகிறது.

அபிஷேக் பிறந்ததிலிருந்து நன்றாக இருந்துள்ளான். ஆனால் நாளடைவில் அவனிடம் ஒரு சோர்வு தெரிந்தது. எப்பவுமே களைத்து காணப்பட்டான். அதனால் அவனை மருத்துவமனைக்கு கூட்டிக் கொண்டுபோனார்கள். அபிஷேக்கை பரிசோதித்த டாக்டர்களும் உடம்பில் ரத்தம் குறைவாக இருக்கிறது, அதனால் நல்ல சத்தான சாப்பாட்டை கொடுங்கள் என்று சொன்னார்கள்.

அதனால் தினமும் அபிஷேக்கிற்கு வலுவான ஆகாரத்தை கொடுக்க ஆரம்பித்தனர்.

ஆனால் 2 மாதங்களுக்கு முன்னர் அபிஷேக் மயங்கியுள்ளான்.

இதையடுத்து மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட அவனுக்கு சோதனை செய்தபோது லட்சக்கணக்கானோரில் ஒருவருக்கு வரும் Aplastic Anemia நோய் வந்தது தெரியவந்தது.

இதன் பாதிப்பு என்னவென்றால், உடலில் ரத்தத்தில் உள்ள செல்கள் உற்பத்தியாகாமல் நின்றுவிடும். இருக்கும் செல்களும் குறிப்பிட்ட நாள்கள் முதல் ஒருசில மாதங்கள் வரைதான் உயிரோடு இருக்கும். பிறகு அந்த செல்கள் இறந்துவிடும்.இதனால் கண், காது, மூக்கு, வழியாக ரத்தம் வெளியேற ஆரம்பிக்கும். இப்படித்தான் சிறுவனுக்கு ரத்தம் வெளியேறி கொண்டிருக்கிறது.

இதற்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று சிஎம்சி டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்

இதற்காக குறைந்தது 25 லட்சம் ரூபாய் செலவாகிறது என்றும் கூறப்படுகிறது. விவசாயத்தை நம்பி மட்டும் வாழும் அபிஷேக் பெற்றோர், இவ்வளவு தொகையை எங்கிருந்து புரட்டுவது என தெரியாமலும், மகன் படும் அவஸ்தையை பார்க்க சகிக்க முடியாமலும் அழுது புலம்புகிறார்கள்.
தற்போது அபிஷேக்கிற்கு ஒருநாளைக்கு 4 யூனிட் ரத்தம் ஏற்றிக் கொண்டே இருக்கிறார்கள்.

அபிஷேக்கின் பெற்றோர் கூறுகையில், தினமும் எங்கள் கண்முன்னாலேயே இப்படி ரத்தம் வழிந்து வருவதை பார்க்க முடியவில்லை. என் பிள்ளையால் சாப்பிட கூட முடியாமல் போய்விட்டது.

மருத்துவமனை எதிரிலேயே ஒரு அறை எடுத்து தான் தங்கி இருக்கிறோம். எப்போதெல்லாம் ரத்தம் கொட்டுகிறதோ உடனே மருத்துவமனைக்குள் அழைத்து சென்று ரத்தம் ஏற்றிவிடுகிறோம்.

எங்கள் மகனை காப்பாற்ற யாராவது உதவினால் நன்றாக இருக்கும் என்று கண்ணீருடன் கூறியுள்ளனர்.
Previous Post Next Post