இரண்டு பெண் குழந்தைகளை தண்ணீரில் அமுக்கி கொன்ற கொடூர தாய்: அதிர்ச்சி காரணம்


இந்தியாவில் கணவர் மீதுள்ள கோபத்தில் பெற்ற குழந்தைகளை கொலை செய்த தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவர் ஷாம். இவர் மனைவி தீபா அம்தே (23). தம்பதிக்கு மூன்று வயதில் ஒரு பெண் குழந்தையும், 4 மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.

இந்நிலையில் ஷாமுக்கும், தீபாவுக்கு அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதோடு, மனைவி மீது தீபா சந்தேகப்பட்டுள்ளார்.

ரிக்‌ஷா ஓட்டுனரான ஷாம் நேற்று வழக்கம் போல தனது பணிக்கு சென்றார்.

அப்போது தீபா வீட்டில் தனது குழந்தைகளுடன் இருந்தார். கணவர் மீதான ஆத்திரத்தில் இருந்த அவர் தனது குழந்தைகளை அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் அமுக்கி கொலை செய்தார்.

இதன்பின்னர் வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார்.

இதையடுத்து மாலை வீட்டுக்கு வந்த ஷாம் மனைவி, குழந்தைகள் மாயமானதை பார்த்து அதிர்ச்சியடைந்து பொலிசாருக்கு தகவல் கொடுத்தார்.

சம்பவ இடத்துக்கு வந்து பொலிசார் சோதனை செய்த போது தண்ணீர் தொட்டியில் இரண்டு குழந்தைகளும் சடலமாக இருப்பதை கண்டுப்பிடித்தனர்.

இதையடுத்து தீபாவையும் கண்டுபிடித்து விசாரித்த போது குழந்தைகளை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.

இதையடுத்து அவரை கைது செய்த பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Previous Post Next Post