இலங்கையின் பிரதான வீதியொன்றில் திடீரென ஏற்பட்ட பாரிய குழி!!

தலவாக்கலை – நாவலப்பிட்டி பிரதான வீதியின் பத்தனை, திம்புள்ள தோட்டத்திற்கு அருகிலுள்ள வீதியில் திடீரென பாரிய குழியொன்று ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக குறித்த வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்த வீதியூடாக கனரக வாகனங்கள் பயணிப்பது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை மாற்று வழியாக ஹட்டன், கினிகத்தேனை வீதியை பயணிகள் பயன்படுத்த முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், சிறிய வாகனங்கள் இந்த வீதியூடாக பயணிக்க முடியுமென்ற போதிலும் மிகுந்த அவதானத்துடன் பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த பகுதியை திருத்துவதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post