வன்னியூர் செந்துாரன்… நீதிமன்றில் அதிர்ச்சித் தகவல்கள்!

வன்னியூர் செந்துாரன் உடலுறவு கொண்ட பெண்கள் எத்தனை!! நீதிமன்றில் அதிர்ச்சித் தகவல்கள் இதோ

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக விரிவுரையாளர் போதநாயகி நடராசாவின் உயிரிழப்புத் தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சட்ட மருத்துவ அதிகாரியால் முன்னெடுக்கப்பட்ட உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கை நீதிமன்றில் முன்வைக்கப்படாமையால் வழக்கு விசாரணையை வரும் டிசெம்பர் 3ஆம் திகதிவரை ஒத்திவைத்தது திருகோணமலை நீதிவான் நீதிமன்றம்.

திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் இன்று(22) திங்கட்கிழமை வழக்கு விசாரணைக்கு வந்தது.

விரிவுரையாளரின் கணவர் வன்னியூர் செந்தூரன், அவரது சகோதரர் மற்றும் நண்பர்களும் விரிவுரையாளரரின் தாய் மற்றும் சகோதரர்களும் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர்.

கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாக பெண் விரிவுரையாளரான வவுனியா, ஆசிக்குளத்தைச் சேர்ந்த திருமதி போதநாயகி செந்துரன் (வயது-29) என்ற கர்ப்பிணி பெண் கடந்த செப்ரெம்பர் 20ஆம் திகதி திருகோணமலை கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இந்த நிலையில் வழக்கு இன்று விசாரணைக்காக எடுக்கப்பட்டது.

திருகோணமலை வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி குறித்த இறப்பு நடைபெற்ற வேளை விடுமுறையில் சென்றிருந்தார்.

அதனால் விரிவுரையாளரின் சடலத்தை உடற்கூற்றுப் பரிசோதனை யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சட்ட மருத்துவ நிபுணர் மயூரதன் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டது.

உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கை திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படாத நிலையில் வழக்கு விசாரணையை தவணையிடுமாறு பொலிஸாரால் கோரப்பட்டது.

அதனால் வழக்கை வரும் டிசெம்பர் 3ஆம் திகதிக்கு நீதிவான் ஒத்திவைத்தார்.

இந்நிலையில் வன்னியூர் செந்தூரன் தொடர்பான பல்வேறு ஆதரங்கள் மன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

* தான் கடமை புரியும் வேலைத்தளத்திலும் இரு பெண்களுடன் பாலியல் தொடர்பை பேணியமை

* வன்னி பகுதியில் கணவனை இழந்த ஒரு குழந்தையின் தாயாரை ஏமாற்றி பாலியல் தொடர்பில் இருந்தமை.

* முகநூலில் அறிமுகமான பெண் ஒருவரிடம் உள்ளாடைகளை கழற்றி காட்டுமாறு சில்மிசம் செய்தமை.




* திருமண பொருத்துனர் எனும் பெயரில் பல்வேறு மோசடிகள்.

* மனைவியான போதநாயகி விடுதியை விட்டு புறப்படும் முன் குறும் செய்தி அனுப்பினார் என பொய் கூறியமை.

* போதநாயகியின் தோழியை கொலை செய்யப்போவதாக மிரட்டியமை.

* அமேரிக்காவிலுள்ள ஒருவரின் மகளை மணம் முடிப்பதாக கூறி கோடிக்கணக்கான பணம் ஊண்டியல் மூலம் பரிமாறப்பட்டமை.

இன்னு பல குற்றங்கள் அடுக்கப்பட்டுள்ளன.

Previous Post Next Post