காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவனுடன் சேர்த்து வையுங்கள் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் இளம்பெண் கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார்.
பெரம்பலூர் அருகேயுள்ள அம்மாபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயசாந்தி. இவர், எனது கணவருடன் சேர்த்து வையுங்கள் என்ற கோஷத்தோடு ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினார்.
இவர் தனக்கு நேர்ந்தது குறித்து கூறியதாவது, பொலிசாக பணியாற்றி வந்த லோகநாதன் என்பவரும் நானும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தோம்.
வீட்டுக்குத் தெரிந்தால் பிரச்னையாகிவிடும் என்று சொன்னதால், நாங்கள் இருவரும் கடந்த ஆண்டு அவிநாசியில் உள்ள எனது தோழியின் வீட்டில் ரகசியத் திருமணம் செய்துகொண்டோம்.
இதனைத்தொடர்ந்து தனியாக வீடு எடுத்து தங்கினோம், இதற்கிடையில் நான் 2 மாதம் கர்ப்பமானேன்.
இதையறிந்த, லோகநாதன் மற்றும் அவரது பெற்றோர் கருவைக் கலைத்தால் மட்டுமே குடும்பத்துடன் ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, நானும் குடும்பத்தில் சேர்ந்துவிட வேண்டும் என்பதற்காக துறையூர் பாலக்கரையில் உள்ள சித்த மருத்துவரிடம் கருவை கலைத்தேன். இதன் பின்னர், வீட்டுக்கு அழைத்துச் செல்ல வற்புறுத்தியதற்கு, லோகநாதன் மற்றும் அவரது குடும்பத்தினர் ஏற்க மறுத்து விட்டனர்.
ன்னுடன் எனது கணவரை சேர்த்துவைக்க வேண்டும். எனது கருவை கலைக்கவைத்த லோகநாதன் குடும்பத்தார்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி, ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டேன் என வேதனையுடன் கூறியுள்ளார்.