ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சர்கார்’ படத்தின் டீசர் உலகளவில் முதல் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்கார்’. கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில், வரலட்சுமி சரத்குமார், ராதாரவி, பழ.கருப்பையா, யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
‘சர்கார்’ படத்தின் டீசரை நேற்று மாலை 6 மணிக்கு படக்குழு வெளியிட்டது.
டீசர் வெளியான 10 நிமிடங்களிலேயே 10 லட்சத்துக்கும் அதிகமான முறை டீசர் பார்க்கப்பட்டது. 20 நிமிடங்களில் 20 லட்சம் பார்வை, என அதிகமான முறை பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளது.
பார்வைகள், விருப்பங்கள், ரசிகர்களின் கருத்துகள் என்று மூன்று விதங்களில் ‘சர்கார்’ டீசர் சாதனை படைத்துள்ளது. ஐந்தரை மணி நேரத்தில் ‘சர்கார்’ டீஸர் 1 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது. 17 மணிநேரங்களில் 1 கோடியே 30 லட்சம் பார்வையளர்களை பெற்றுள்ளது.
5 மணிநேரத்தில் 10 லட்சம் லைக்குகளை பெற்ற ‘சர்கார்’ டீசர், உலகின் அதிக லைக்குகளை பெற்ற டீசர் என்ற சாதனையை படைத்துள்ளது. மேலும் 1 லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்கள் டீசர் குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்தியா மற்றும் இலங்கையில் ‘சர்கார்’ டீசர் யூடியூப் டிரெண்டிங்கில் முதல் இடத்திலும், ஐக்கிய அரபு எமைரேட்சில் இரண்டாவது இடத்திலும் உள்ளது.
‘சர்கார்’ படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது.