
புதுக்கோட்டை மாவட்டத்தில் காதலனுடன் இருந்தபோது மூச்சுத்திணறி இறந்துபோன கஸ்தூரி என்ற இளம்பெண்ணின் மரணத்தில் நடந்தது குறித்து காதலன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஆட்டோ ஓட்டி வரும் நாகராஜன் என்பவருக்கும், 19 வயதான கஸ்தூரி என்ற இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது
கஸ்தூரியின் பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் கஸ்தூரிக்கு, ஆட்டோ டிரைவர் நாகராஜ் என்பவருடன் பழக்கம் இருப்பது தெரியாது.
இந்நிலையில் கடந்த 28-ம் தேதி காலை வேலைக்குச் சென்ற கஸ்தூரி வீடு திரும்பவில்லை என பெற்றோர் பொலிசில் புகார் அளித்தனர்
பொலிசார் விசாரணை மேற்கொண்டபோது டிரைவர் நாகராஜனுக்கும் கஸ்தூரிக்கும் பழக்கம் ஏற்பட்டு சம்பவத்தன்று இருவரும் ஆலங்குடியிலிருந்து ஒன்றாகச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து பொலிசாரின் விசாரணையில் நாகராஜ் சென்னையில் பதுங்கியிருப்பது தெரிய வர, சென்னை விரைந்த தனிப்படை பொலிசார் நாகராஜை கைது செய்தனர்.
நாகராஜன் பொலிசில் அளித்துள்ள வாக்குமூலத்தில், எனக்கும், கஸ்தூரிக்கும் பழக்கம் இருந்தது உண்மைதான். சம்பவம் நடைபெற்ற அன்று கஸ்தூரியை அழைத்துக்கொண்டு, ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்துக்கு சென்றேன்.
அங்கு, தனிமையில் இருந்தபோது கஸ்தூரிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கிவிட்டார். அவரின் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பி பாத்தேன். ஆனால் அவள் இறந்துவிட்டாள். அதையடுத்து, கஸ்தூரியின் உடலை சாக்குப்பையில் கட்டி எனது ஆட்டோவில் ஏற்றி தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள மல்லிப்பட்டினம் பகுதியிலுள்ள ஆற்றில் வீசிவிட்டு, என் மீது சந்தேகம் வராமல் இருக்கச் சென்னை சென்றுவிட்டேன் என வாக்குமூலம் அளித்துள்ளது பொலிசாரை அதிரவைத்துள்ளது.
கஸ்தூரியின் குடும்பத்தார், `கஸ்தூரி காணாமல் போனது குறித்து புகார் கொடுத்ததில் இருந்தே பொலிசார் அலட்சியமாகச் செயல்பட்டதாகவும், தற்போது நாகராஜன் என்பவரை மட்டும் குற்றவாளியாகக் காண்பிப்பதாகவும் குற்றம் சாட்டுவதுடன், கஸ்தூரியைத் தனிநபராக கொலை செய்து மூட்டையில் கட்டிக்கொண்டு சென்று மல்லிப்பட்டினம் ஆற்றில் விட்டு வர வாய்ப்பு இல்லை.
ஆகவே, நடந்த சம்பவத்தை முழுமையாக விசாரித்து கஸ்தூரியின் மரணத்துக்குக் காரணமான குற்றவாளிகள் அனைவரையும் கண்டுபிடிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.