அவரோடு வாழ்ந்தது போதும்! கணவரை கொன்று விட்டு நாடகமாடிய மனைவி சிக்கிய பின்னணி

தமிழகத்தில் மதுவுக்கு அடிமையான கணவரை கொன்று விட்டு நாடகமாடிய மனைவியை பொலிசார் கைது செய்துள்ளனர்.

வேலூர் மாவட்டம் மோசூரை சேர்ந்தவர் பிரபு. இவர் மனைவி லட்சுமி.

தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். குடிப்பழக்கத்துக்கு அடிமையான பிரபு, தினமும் மதுகுடித்துவிட்டு வீட்டுக்கு வந்து லட்சுமியை அடித்து துன்புறுத்தியுள்ளார்.

நாளுக்கு நாள், பிரபுவின் தொல்லை அதிகரித்தது. அதை பொறுத்துக்கொள்ள முடியாமல் தவித்த லட்சுமி கணவரை கொல்ல முடிவெடுத்தார்.

அதன்படி வழக்கம்போல குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த பிரபு, லட்சுமியைத் தாக்கியுள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த லட்சுமி பிரபுவின் கழுத்தை துப்பட்டாவால் நெரித்தார். இதில் அவர் மயக்கமடைந்தார். அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த லட்சுமி, ஆட்டோவில் பிரபுவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் பிரபு இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து பொலிசுக்கு தகவல் தரப்பட்ட நிலையில் லட்சுமியிடம் விசாரித்தனர். அப்போது பிரபு குடிபோதையில் கீழே விழுந்துவிட்டதாகக் கூறினார்.

ஆனால் பொலிசாருக்கு லட்சுமி மீது சந்தேகம் எழுந்த நிலையில் கிடுக்குபிடி விசாரணை நடத்தினர்.

இதில் கணவரை கொன்றதை ஒப்பு கொண்டார்.




பொலிசார் கூறுகையில், முதலில் பிரபு கீழே விழுந்துவிட்டதாகக் கூறினார். கழுத்தை நெரித்த அடையாளங்களை சுட்டிக்காட்டி விசாரித்தபோதுதான் லட்சுமி கொலை செய்ததை ஒத்துக்கொண்டார்.

மேலும், அவரோடு வாழ்ந்தது போதும் என விசாரணையில் கூறினார் என தெரிவித்துள்ளனர்.
Previous Post Next Post