அளவு கடந்த காதலால் நேர்ந்த சோகம்: கணவன் இறந்த செய்தி கேட்டு தற்கொலை செய்துகொண்ட மனைவி


தெலுங்கானா மாநிலத்தில் கணவன் இறந்த செய்தி கேட்டு, பூச்சி மருந்து குடித்து மனைவியும் தற்கொலை செய்துகொண்டுள்ள சோக சம்பவம் நடந்துள்ளது.

தெலுங்கானா மாநிலம் யாதேரி புவனகிர் மாவட்டம் அருகே சிங்காரம் பகுதியை சேர்ந்த பந்தாரு ஸ்ரீநிவாஸ் ரெட்டி (38), கடந்த ஒரு வருடத்திற்கு முன்னதாக அபர்ணா (28) என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.

இந்த நிலையில் ஸ்ரீநிவாஸ் தன்னுடைய நிலத்தினை பார்வையிட சென்றபோது, பெற்றோருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதில் மனமுடைந்த ஸ்ரீநிவாஸ் வீட்டிற்கு வந்ததும், மின்விசிறியில் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதற்கிடையில் கணவன் இறந்த செய்திகேட்டு அதிர்ச்சியடைந்த அபர்ணா பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

உடனே அவரை மீட்ட உறவினர்கள் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திருமணம் முடிந்த ஒரு வருடத்தில் புதுமணத்தம்பதியினர் அடுத்தது தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post