மனைவியை விவாகரத்து செய்துவிட்டு மகளை திருமணம் செய்து கொண்ட தந்தை

பாகிஸ்தானில் மனைவியை விவாகரத்து செய்த கணவர் வளர்ப்பு மகளை திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹரிபூர் நகரை சேர்ந்தவர் வாரீஸ் ஷா. இவர் சமீபத்தில் தனது 40 வயதான மனைவியை விவாகரத்து செய்தார்.

இதையடுத்து மனைவிக்கு முதல் கணவருடன் பிறந்த மகளை வாரீஸ் திருமணம் செய்து கொண்டார்.

இதை எதிர்த்த வாரீஸின் மனைவி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அங்கு தாயும், மகளும் சண்டை போட்டு கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து வாரீஸின் வளர்ப்பு மகள், தந்தையை கணவனாக ஏற்று அவருடன் செல்லலாம் என நீதிமன்றம் கூறியது.

ஆனால் இதை எதிர்த்த வாரீஸின் முதல் மனைவி இது சட்டவிரோதமானது என வாதிட்டார்.

இந்த வழக்கில் ஏற்கனவே வாரீஸின் தந்தை, வாரீஸ், வளர்ப்பு மகள் ஆகியோர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியில் வந்தார்கள்.

அதே சமயத்தில் இந்த திருமணத்தை நடத்தி வைத்த பதிவாளர் அலி ஹசன் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


Previous Post Next Post