கொழும்பு துறைமுகத்தில் ஏற்பட்ட பதற்றம் : வெடித்து சிதறிய கொள்கலன் : அதிர்ச்சியடைந்த ஊழியர்கள்!!

கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் ஒன்று வெடித்தமையினால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களுக்கு முன்னர் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டுவந்த கொள்கலன்களில் ஒன்றே வெடித்துள்ளது.

இந்தக் கொள்கலன் பங்களாதேஷிற்கு அனுப்புவதற்கு தயாராக இருந்த நிலையில் திடீரென வெடித்து சிதறியுள்ளது.

கொழும்பு துறைமுகத்தில் JCT 3 மற்றும் 4 பகுதியில் வைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று மாலை இந்த கொள்கலன் வெடித்துள்ளது.


குறித்த கொள்கலன் இருந்த வாகனத்தை ஓட்டிய சாரதி அதிர்ச்சியடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இரசாயன பொருட்கள் அடங்கிய கொள்கலனே இவ்வாறு வெடித்துள்ளதாக துறைமுகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.






Previous Post Next Post