யாழில் கல்வி நிலையத்துக்கு செல்லும் மாணவிகளுக்கு ஏற்பட்ட பரிதாபம்...!

யாழ்ப்பாணத்தில் தனியார் கல்வி நிலையத்துக்குச் சென்று வீடு திரும்பும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ். வண்ணார்பண்ணைப் பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கைதுசெய்யப்பட்ட குடும்பத்தர் ஒருவரை நீதிவான் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு தனியார் கல்வி நிலையத்துக்குச் சென்று திரும்பும் மாணவிகளுக்கு வீதியில் வைத்து பாலியல் ரீதியான தொல்லை விளைவித்தார் என்று கொட்டடியைச் சேர்ந்த குடும்பத்தலைவர் ஒருவருக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பெண்கள் பிரிவுக்கு முறைப்பாடுகள் கிடைத்தன.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பெண் பொலிஸ் பிரிவு உத்தியோகத்தர்கள், அவரை கைதுசெய்து விசாரணைகள் மேற்கொண்ட பின் யாழ்.நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது நீதிவன் அவரை 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

Previous Post Next Post