இளைஞர் மரண வழக்கில் அதிரடி திருப்பம்: அடக்கம் செய்யும் இறுதி நொடியில் சிக்கிய குற்றவாளிஉத்திர பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த பிரமுகரின் மகன் மரண வழக்கில் அதிரடி திருப்பமாக இறுதி நிமிடத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்திர பிரதேச மாநிலம் சமாஜ்வாதி கட்சியினை சேந்த ரமேஷ் யாதவின் மகன் அபிஜித் யாதவ் (23). கல்லூரியில் படித்து வரும் அபிஜித் நேற்று மரணமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து கூறிய அவருடைய தாய், மது போதையில் வந்த அபிஜித்ற்கு திடீர் மூச்சு திணறல் மற்றும் நெஞ்சுவலி ஏற்பட்டதால் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.அவர் கூறியதை போலவே பிரேத பரிசோதனை அறிக்கையும் வெளிவந்தது. இதனையடுத்து அவருடைய மரணத்தை இயற்கை மரணம் என முடித்து வைக்க நினைத்த பொலிஸார் இறுதிச் சடங்கிற்கான வேளைகளில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது அபிஜித்தின் கழுத்தில் கை தடங்களை பார்த்த பொலிஸார் உடனடியாக இறுதிச்சடங்கினை தடுத்து நிறுத்தி உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இளைஞர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.


பின்னர் சம்பவம் குறித்து அபிஜித் குடும்பத்தாரிடம் பொலிஸார் விசாரணை மேற்கொள்ளும் போது, அபிஜித் குடித்து விட்டு வந்ததால் ஆத்திரம் தாங்காமல் கொலை செய்தேன் என அவருடைய அம்மா மீரா யாதவ் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் மீரா அபிஜித்தின் அம்மா இல்லை எனவும், அவர் மூத்த மனைவிக்கு பிறந்த மகன் என்பதும் தெரியவந்தது.
Previous Post Next Post