மனைவியின் தங்கைக்கு தொல்லை கொடுத்து வந்த மைத்துனர்: நடந்த விபரீத சம்பவம்

இந்தியாவில் மனைவியின் தங்கைக்கு மைத்துனர் தொடர்ந்து தொல்லை கொடுத்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் லிங்லா பிக்‌ஷம்.

இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகளை அசோக் என்பவர் திருமணம் செய்துள்ளார்.

இரண்டாவது மகளான அனுஷா கல்லூரில் படித்து வந்தார்.

இந்நிலையில் தன்னுடைய விருப்பத்தை நிறைவேற்றவில்லை என்றால் நீதிமன்றத்தில் பொய் வழக்கு தொடருவேன் என அனுஷாவை அசோக் மிரட்டி வந்துள்ளார்.

இதோடு சமீபத்தில் பொய்யாக நீதிமன்ற நோட்டீஸ் அனுப்பி வழக்கில் ஆஜராகவில்லை என்றால் கைது செய்யப்படுவாய் என மிரட்டியுள்ளார்.

மைத்துனர் அசோக்கின் தொடர் மிரட்டல் மற்றும் தொல்லையால் மனமுடைந்த அனுஷா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து அனுஷாவின் தந்தை, அசோக் மீது பொலிஸ் புகார் அளித்த நிலையில் பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்
Previous Post Next Post