சுவிட்சர்லாந்தில் 55 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களிடம் இருந்து ஆண்டுக்கு சுமார் 400 மில்லியன் பிராங்குகள் வரை மோசடி செய்யப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சுவிட்சர்லாந்தில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று மேற்கொண்ட ஆய்வில் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இழந்த தொகை உள்ளிட்டவையை கணக்கில் கொண்டு துரித நடவடிக்கை தேவை எனவும் அந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் 55 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களில் நான்கில் ஒருவர் கடந்த 5 ஆண்டுகளில் குறித்த மோசடியில் சிக்கி பணத்தை இழந்துள்ளனர்.
இது ஆண்டுக்கு சுமார் 400 மில்லியன் பிராங்குகள் வரை இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
பொதுவெளியில் திட்டமிட்ட கொள்ளை அல்லது வங்கி ஏ.டி.எம்.கள் மூலம் சிக்கவைத்து கொள்ளை, பதிவு செய்யாத பொருட்களுக்கு கட்டாய நிதி வசூல் அல்லது இணையம் வாயிலாக திருட்டு உள்ளிட்டவைகளில் முதியவர்கள் அதிகமாக மோசடிக்கு உள்ளாவதாக தெரியவந்துள்ளது.
மட்டுமின்றி பெண்களை விடவும் ஆண்களே இதுபோன்ற மோசடிகளில் மிக அதிகமாக சிக்குவதாகவும், பெரஞ்சு மொழி பேசும் சுவிஸ் மக்களே மிக எளிதில் சிக்குவதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
மேலும், தாங்கள் மோசடியில் சிக்கி பணத்தை இழந்துள்ளதை பத்தில் 6 பேர் எவரிடமும் பகிர்ந்து கொள்வதில்லை எனவும் தெரியவந்துள்ளது.