வவுனியாவில் குளத்தில் மூழ்கிசிறுவன் பலி!!

குளத்தில் மூழ்கிசிறுவன் பலி!!
வவுனியா பூம்புகார் பகுதியில் உள்ள வயிராமூன்று முறிப்பு குளத்தில் தவறி வீழ்ந்தசிறுவன் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.

நேற்று மாலை குறித்த சிறுவன் குளத்தில் ஆயுத தளபாடங்களை சுத்தமாக்கிகொண்டிருந்த போது தவறி வீழ்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.

பின்னர் அருகில் இருந்தோர் சிறுவனை மீட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்தனர். எனினும் சிறுவன் முன்னமே இறந்துவிட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.

குறித்தசம்பவத்தில் பூம்புகார் பகுதியைசேர்ந்த தேவகுமார் அனுசன் வயது 14 என்ற  சிறுவனே சாவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சடலம்பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கபட்டுள்ளது.சம்பவம் தொடர்பாக ஈச்சங்குளம் போலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post