அடிப்படை சம்பளத்தை ஆயிரம் ரூபாயாக உயர்த்துமாறு யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்

அடிப்படை சம்பளத்தை ஆயிரம் ரூபாயாக உயர்த்துமாறு வலியுறுத்தி போராடும் தோட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ் பேருந்து நிலையம் முன்பாக இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணியளவில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தள நண்பர்களின் ஏற்பாட்டில் “தோட்டத் தொழிலாளருக்காய் வடக்கில் இருந்து ஓர் உரிமை குரல்” என்ற தொனிப் பொருளின் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது, தோட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவாகவும், அரசுக்கு எதிராகவும், தோட்ட கம்பனிகளுக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோசங்களை எழுப்பியிருந்தனர்.

படங்கள்: ஐ.சிவசாந்தன்
















Previous Post Next Post