ஒரு தமிழருக்காக லோகோவையே மாற்றிய கூகுள்: யார் அவர்? வியக்கவைக்கும் தகவல்


கூகுள் லோகோவில் பிரபல மருத்துவர் கோவிந்தப்பா வெங்கடசாமியின் படம் இடம்பிடித்துள்ளது தமிழர்களை பெருமையில் ஆழ்த்தியுள்ளது.

கூகுள் தனது லோகோவை தினமும் முக்கியமாக நபர்களுக்காக மட்டும் மாற்றும்.

அதாவது கூகுள் டூடிள் என அழைக்கப்படும் இதில் உலகின் சிறந்த நபர்களின் பிறந்தநாள், இறந்தநாளின் போது மரியாதை அளிக்கும்விதமாக லோகோ மாற்றப்படும்.

இந்நிலையில் தமிழகத்தின் மதுரையில் பிறந்த கோவிந்தப்பா வெங்கடசாமியின் படத்தை இன்று மாற்றி அவரின் பிறந்தநாளை கூகுள் கொண்டாடியுள்ளது.

கோவிந்தப்பா வெங்கடசாமி அக்டோபர் மாதம் 1-ஆம் திகதி 1918ஆம் ஆண்டு பிறந்தார்.


இவர் தான் மதுரையில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனையின் நிறுவனர்.

பார்வை குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பலருக்கு வாழ்வளித்தவர் இவர். கடந்த 2006-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 7-ஆம் திகதி இவர் மறைந்தார்.

இறுதி வரை மக்களுக்கு சேவையாற்றிய கோவிந்தப்பாவின் பிறந்தநாளை கெளரவிக்கும் விதத்தில், கூகுள் என்ற சொல்லின் GO என்ற முதல் இரண்டு வார்த்தை மங்கலாக உள்ளது, அதற்கடுத்து அவரின் புகைப்படம் இடம்பிடித்த பின் மங்கலான எழுத்துக்கள் தெளிவாகின.

அவர் கண் மருத்துவ உலகில் ஆற்றிய சாதனையை பாராட்ட இவ்வாறு மரியாதை அளிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post