கணவரை கொல்ல வாடகை கொலையாளிகளை ஏற்பாடு செய்த மனைவி: பின்னர் நடந்த பகீர் சம்பவம்


காதலனுடன் இணைந்து கணவரை கொலை செய்ய வாடகை கொலையாளிகளை ஏற்பாடு செய்த மனைவியை அதே கும்பல் கொலை செய்ய திட்டமிட்டது அம்பலமாகியுள்ளது.

இந்தியாவின் கேரள மாநிலம் கொச்சி நகரில் கணவரை கொல்ல திட்டமிட்டு கொலையாளிகளுக்கு தர வேண்டிய பணத்தை தராமல் இழுத்தடித்த காரணத்தாலையே அவர்கள் குறித்த பெண்மணியை கொல்ல திட்டமிட்டதாக தெரியவந்துள்ளது.

கணவரை கொலை செய்த பின்னர் தனது பெயரில் உள்ள இரண்டு ஏக்கர் நிலத்தை விற்று அந்த பணத்தில் காதலருடன் வாழ குறித்த பெண்மணி திட்டமிட்டுள்ளார்.

கணவரை கொலை செய்ய வாடகை கொலையாளிகளுக்கு 4 லட்ச ரூபாய் தருவதாக காதலருடன் இணைந்து குறித்த பெண்மணி ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே கொலைத் திட்டத்தில் இருந்து படுகாயத்துடன் கணவர் உயிர் பிழைத்த நிலையில், தர வேண்டிய பணத்தை அவர் தர தாமதித்ததாக தெரியவந்துள்ளது. மட்டுமின்றி பணம் தருவதாக ஒப்புக்கொண்ட குறித்த பெண்ணின் காதலரும் தலைமறைவாகியுள்ளார்.

பணம் தராமல் ஏமாற்றிய அந்த நபரை வாடகை கொலையாளிகள் கும்பல் தேடிச்சென்ற போது பொலிசில் சிக்கியுள்ளனர்.

கணவர் கொல்லப்பட்ட பின்னர் கொலைகாரர்களுக்கு பணம் தர தமது பேரில் உள்ள நிலத்தை விற்க அவர் திட்டமிட்டிருந்தார்.

ஆனால் கணவர் படுகாயத்துடன் உயிர் தப்பியதால் அந்த திட்டமும் நிறைவேறாமல் போனது. அதன் பின்னர் அந்த நிலத்தை அடமானம் வைத்து பணம் திரட்ட முடிவு செய்துள்ளார்.




பொலிசார் கைது செய்ததும், அந்த திட்டமும் தோல்வியில் முடிந்தது. இந்த விவகாரம் தொடர்பில் கைதான சுஜாதா மற்றும் காதலன் சுரேஷ் பாபு இருவரை ஜாமீனில் வெளிக்கொண்டுவர குடும்பத்தினர் மறுத்துள்ளனர்.

சுஜாதாவின் மகன் தமது தந்தையுடன் வாழ்ந்து வருகிறார். சுரேஷ் பாபுவின் மனைவி விவாகரத்து கேட்டு முன்னரே மனு அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Previous Post Next Post