கொழும்பில் அதிகளவு போதையில் மிதந்த பெண் வைத்தியர் : இளைஞர்களுடன் நடந்து கொண்ட விதம்!!

கொழும்பில் பெண் வைத்தியர் ஒருவரின் அளவுக்கு அதிகமான குடிபோதையினால் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் குறித்த வைத்தியர் தொடர்பான மேலதிக தகவல்களை பொலிஸார் இன்று வெளியிட்டுள்ளனர்.

கொழும்பின் புறநகர் பகுதியான பொரலெஸ்கமுவ பிரதேசத்தில் அதிக குடிபோதையில் பெண் வைத்தியர் ஒருவர் ஓட்டிய வாகனம், பொலிஸ் பரிசோதகர் ஒட்டிய வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியுள்ளது.

இந்த விபத்தினால் பொலிஸ் பரிசோதகர் உயிரிழந்த நிலையில், அவர மனைவி மற்றும் பிள்ளைகள் படுகாயமடைந்து களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து நேற்று அதிகாலை 12.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய 51 வயதான பொலிஸ் பரிசோதகர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் குறித்த பெண் வைத்தியர் அதிக குடி போதையில் இருந்துள்ளார்.

கல்கிஸ்ஸ பிரதேசத்தில் இடம்பெற்ற விருந்தில் கலந்து கொண்ட பெண் வைத்தியர் அளவுக்கு அதிகமாக குடித்துள்ளார். இதனையடுத்து இரு பெண்கள் மற்றும் இளைஞர்களையும் அழைத்து கொண்டு வாகனத்தை ஓட்டிய நிலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

அளவுக்கு அதிகமான குடிபோதையில் மற்றுமொரு விருந்தில் கலந்து கொள்வதற்கே இந்த குழுவினர் சென்றிருப்பதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
விபத்தினால் பொலிஸ் பரிசோதகரின் முழு குடும்பமே பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் உறவினர்களின் வீடு ஒன்றிற்கு சென்று திரும்பி வரும்போதே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தை ஏற்படுத்திய 39 வயதான டிரான் காவிந்தியா என்ற பெண் வைத்தியர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
Previous Post Next Post