திருமணமான ஒரு மாதத்தில் மனைவியால் வந்த மரணம்: அம்மாவிடம் புதுமாப்பிள்ளை சொன்ன கடைசி வார்த்தை

கடந்த வாரம் சென்னை திருவான்மியூர் கடற்கரையில் திருமணமான ஒரு மாதத்தில் கதிரவன் என்பவர் தனது மனைவி அனிதாவின் காதலன் ஜெகனால் கொலை செய்யப்பட்டார்.

ஏற்கெனவே, அனிதாவுக்கு தன்னுடன் கல்லூரியில் பயின்ற ஜெகன் என்ற நபருடன் இருந்த காதல், அவருடைய வீட்டுக்கு தெரிந்திருக்கிறது. இதை மறைத்துதான் கதிரவனுக்குத் திருமணம் செய்துவைத்துள்ளனர்.

இந்நிலையில் தான் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.

நடந்தது குறித்து நண்பர் ஒருவர் கூறியதாவது, மேட்ரிமோனியல் மூலமாக வரன் பார்த்து ஏற்பாடு செய்த திருமணம் இது.

இந்தத் திருமணம் நடந்ததிலிருந்தே மகிழ்ச்சி இல்லாமல் இருந்துவந்துள்ளார் அனிதா. இந்த விஷயத்தை, கதிரவனும் பெற்றோர்களிடமிருந்து மறைத்துள்ளார்.

இந்த நிலையில்தான், திருவான்மியூர் கடற்கரைக்கு அழைத்துள்ளார். மனைவியின் அழைப்பைக் கண்டு மகிழ்ந்துபோன கதிரவன், இதுகுறித்து தன் அம்மாவிடம் தொலைபேசி மூலம் அந்தத் தகவலைப் பகிர்ந்திருக்கிறார்.

அப்போது அவர் அம்மாவிடம், 'அனிதா மகிழ்ச்சியாக இல்லாததால் இதுவரை நாங்கள் தாம்பத்ய உறவில் ஈடுபடவில்லை. இனி எல்லாம் சரியாகிவிடும்' என்று கூறியுள்ளார்.

ஆனால், இந்த சந்தர்ப்பத்தின் தான் கதிரவனை தனது காதலனுடன் இணைந்து திட்டம் போட்டு கொலை செய்திருக்கிறார் அனிதா. காரணம் தெரியாமலேயே கதிரவன் இறந்துபோனது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
Previous Post Next Post