
கடல் பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என பொது மக்கள் மற்றும் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் மன்னார் முதல் கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடக ஹம்பாந்தோட்டை, பொத்துவில் வரையான கடல் பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
குறித்த கடல் பிரதேசங்களில் இடியுடன் கூடிய கடும் மழை பெய்வதுடன், காற்று மணிக்கு 70 தொடக்கம் 80 கிலோமீற்றர் வேகத்தில் வீச கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், கடற்தொழில் திணைக்களத்தினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.